/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சத்ய சாய் அமைப்பின் கோடை கால வகுப்புகள்
/
சத்ய சாய் அமைப்பின் கோடை கால வகுப்புகள்
ADDED : மே 15, 2025 12:28 AM
சென்னை,தமிழக ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகள் சார்பில், 'இந்திய கலாச்சாரம் மற்றும் மனிதநேயம்' என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ, மாணவியருக்கு இலவச கோடை கால வகுப்பு நடத்தப்படுகிறது.
இன்று முதல் வரும் 21ம் தேதி வரை தினமும் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை 'ஆன்-லைன்' வாயிலாக நடத்தப்படும் இந்த வகுப்புகளில் ஆன்மிக அறக்கட்டளை, திறன் மேம்பாடு, ஆளுமை வளர்ச்சி, எளிமையான வாழ்க்கை, உயர் சிந்தனை ஆகியவை போதிக்கப்படுகின்றன. இன்று வகுப்புகளை துவக்கி வைத்து சத்ய சாய் சேவா அமைப்புகளின் மாநில தலைவர் சுரேஷ் உரையாற்றுகிறார்.
வகுப்புகளில் பங்கேற்றும் மாணவ, மாணவியருக்கு -சான்றிதழ் வழங்கப்படும். 100 சதவீத வகுப்புகளில் பங்கேற்போருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, 72008 67921 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம் என, என சத்ய சாய் அமைப்பு தெரிவித்துள்ளது.