ADDED : ஏப் 05, 2026 10:33 PM
அ நிறம் | அளவு
எம்.கே.பி.நகர்: 'பிளிங்கிட்' எனும் ஆன்லைன் நிறுவனத்தில் ஸ்கேனர் மிஷின்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் சூர்யா, 28; 'பிளிங்கிட்' எனும் செயலியில், ஆன்லைன் வாயிலாக வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில், நேற்று ஒரு புகார் அளித்தார்.
அதில், 'நேற்று முன்தினம் நள்ளிரவு, விற்பனை முடித்து, கடையில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்திவிட்டு, வீட்டிற்கு சென்றேன். நேற்று காலை பார்த்த போது, 1.20 லட்சம் ரூபாய் மதிப்புடைய நான்கு ஸ்கேனர் கருவிகளை, மர்ம நபர் திருடி சென்றுள்ளார்' என குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கு பதிந்த போலீசார், அந்த மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
