/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளியில் கட்டணம் உயர்வு பெற்றோர் சாலை மறியல்
/
பள்ளியில் கட்டணம் உயர்வு பெற்றோர் சாலை மறியல்
ADDED : செப் 25, 2024 12:15 AM

மடிப்பாக்கம், மடிப்பாக்கம் பிரதான சாலையில், ஹோலி பேமலி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் வகுப்பிற்கு 4,000 ரூபாயாக இருந்த கட்டணம் 9,500 ரூபாயாகவும், ஐந்தாம் வகுப்பிற்கு 4,500 ரூபாய் கட்டணம், 11,500 ரூபாயாகவும், 10ம் வகுப்பிற்கு 6,000 ரூபாய் கட்டணம், 11,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடையவே, நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து போராடினர்.
இதனால் மேடவாக்கம் --- பரங்கிமலை சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு நடத்தினர்.
இதில், 'புதிய கட்டண முறை குறித்து பெற்றோரிடம் ஆலோசிக்கப்படும்' என, பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர்.