ADDED : ஜன 22, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையின் எப்.சி., - இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., ஆகியவை இணைந்து நடத்தும், சென்னை மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, சேத்துப்பட்டு எம்.சி.சி., மைதானத்தில், நாளை மறுநாள் துவங்குகிறது. பிப்ரவரி மூன்றாவது வாரம் வரை நடக்கின்றன.
இதில், யு - 12, யு - 14 பிரிவினருக்கு மட்டும் போட்டிகள் நடக்கிறது. தலா 32 அணிகள் என, மொத்தம் 64 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னையின் எப்.சி., நிர்வாகிகள் கூறுகையில், 'சென்னை அளவில் நடக்கும் இப்போட்டிகள், எதிர்காலத்தில் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடத்த முயற்சிக்கிறோம். இளம் வீரர்களை தேர்வு செய்து, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியாகவும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்' என்றனர்.