ADDED : செப் 26, 2024 12:23 AM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, 'பி' கல்யாணபுரம், முதல் தெருவைச் சேர்ந்தவர் அஜீத், 28; இவர், பிராட்வேயில் உள்ள தனியார் மின்விளக்கு விற்பனை கடையில், விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
அஜீத், நேற்று முன்தினம் நள்ளிரவு, தன்,'டி.வி.எஸ்., எண்ட்ராக்' ரக ஸ்கூட்டரை, வியாசர்பாடி புதுநகரில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை, இவரது பைக் தீப்பற்றி எரிந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, அவருக்கு தகவல் கூறியுள்ளனர். ஸ்கூட்டர் தீப்பற்றிய காரணம் குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
