/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுப்பாட்டை இழந்து மோதிய பஸ்சுக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர்
/
கட்டுப்பாட்டை இழந்து மோதிய பஸ்சுக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர்
கட்டுப்பாட்டை இழந்து மோதிய பஸ்சுக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர்
கட்டுப்பாட்டை இழந்து மோதிய பஸ்சுக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர்
ADDED : பிப் 06, 2026 05:56 AM

கோடம்பாக்கம்: ஆற்காடு சாலையில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, முன்னால் பெண் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது இடித்து, 'மெட்ரோ' தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. பல மணி நேரம் போராடி, பேருந்தின் அடியில் சிக்கிய ஸ்கூட்டர் மீட்கப்பட்டது.
கோயம்பேடு - தி.நகர் வழித்தடத்தில் இயங்கும், 'தடம் எண்: 72' மாநகர பேருந்து, நேற்று காலை கோடம்பாக்கம் வழியாக ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தது.
டிரஸ்ட்புரம் சிக்னலில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் பெண் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது இடித்து, 'மெட்ரோ' சாலை தடுப்பில் மோதி நின்றது.
இந்த விபத்தில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்து, பேருந்தின் அடியில் ஸ்கூட்டர் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தனலட்சுமி, 23, லேசான காயங்களுடன் தப்பினார். மேலும், சாலையோரமாக சென்ற வடமாநில இளைஞர் ஒருவருக் கும் லேசான காயம் ஏற்பட்டது.
பேருந்தின் அடியில் சிக்கிய ஸ்கூட்டரை மீட்க, பல மணி நேரம் ஆனதால், ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து தொடர்பாக, பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதரன், 53, என்பவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

