தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தவணை கட்டாத நடத்துநர் ஸ்கூட்டர் பறிமுதல் :டிக்கெட் இயந்திரம் சிக்கியதால் சலசலப்பு

தவணை கட்டாத நடத்துநர் ஸ்கூட்டர் பறிமுதல் :டிக்கெட் இயந்திரம் சிக்கியதால் சலசலப்பு

தவணை கட்டாத நடத்துநர் ஸ்கூட்டர் பறிமுதல் :டிக்கெட் இயந்திரம் சிக்கியதால் சலசலப்பு


UPDATED : மே 09, 2026 04:38 PM

ADDED : மே 09, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 04:38 PM ADDED : மே 09, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்;தவணை தொகை கட்ட தவறியதால், நடத்துநரின் ஸ்கூட்டரை நிதி நிறுவனம் பறிமுதல் செய்தது. ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பயணச்சீட்டு இயந்திரம், பணப்பை உள்ளிட்டவை சிக்கிக் கொண்டதால், சலசலப்பு ஏற்பட்டது.

எண்ணுார், தாழங்குப்பத்தை சேர்ந்தவர் விஷ்வா, 28; மாநகர பேருந்து நடத்துநர். இவர், சில மாதங்களுக்கு முன், தண்டையார்பேட்டையில் உள்ள நிதி நிறுவனம் மூலம், 'டியோ' ஸ்கூட்டர் வாங்கியுள்ளார்.

சில மாதங்களாக தவணை தொகை கட்டத் தவறியதாக தெரிகிறது. இதனால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, விஷ்வாவின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தது. அந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில், பயணசீட்டு இயந்திரம், பணப்பை உள்ளிட்டவையும் இருந்துள்ளது.

பறிமுதல் நடவடிக்கை பற்றி தெரியாத விஷ்வா, ஸ்கூட்டர் காணாமல் போனதாக, எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தவணை தொகை கட்டத் தவறியதால், நிதி நிறுவனம் ஸ்கூட்டரை பறிமுதல் செய்திருப்பது தெரிந்தது.

பின், தனியார் நிதி நிறுவனத்தினரை காவல் நிலையம் அழைத்த போலீசார், இருக்கையின் அடியில் வைக்கப்பட்டிருந்த பயணச்சீட்டு இயந்திரம் மற்றும் பணப்பை உள்ளிட்டவற்றை, விஷ்வாவிடம் ஒப்படைக்கும்படி கூறினர்.

அதன்படி, இயந்திரம், பணப்பை விஷ்வாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஸ்கூட்டருக்கான தவணை தொகை குறித்து இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என, எழுதி வாங்கிக் கொண்டு, போலீசார் அனுப்பி வைத்தனர். வழக்கு ஏதும் பதியப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us