/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடல் சீற்றம்: பட்டினப்பாக்கத்தில் 10 வீடுகள் சேதம்
/
கடல் சீற்றம்: பட்டினப்பாக்கத்தில் 10 வீடுகள் சேதம்
கடல் சீற்றம்: பட்டினப்பாக்கத்தில் 10 வீடுகள் சேதம்
கடல் சீற்றம்: பட்டினப்பாக்கத்தில் 10 வீடுகள் சேதம்
ADDED : செப் 23, 2024 05:58 AM

சென்னை : பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரையில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இரண்டு நாட்களாக இப்பகுதியில், கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது.வழக்கத்தை விட கடல் அலை, 50 அடி துாரம் கரை வரை அடித்து, வீடுகளுக்குள் புகுந்தது.
இதில், 10 வீடுகளில் கடல் நீர் புகுந்து, வீட்டில் உள்ள பொருட்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. தொடர் சீற்றத்தால், வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. ஆபத்தான நிலையில் மீதமுள்ள வீடுகளை பாதுகாக்க, குடியிருப்புவாசிகள் இரும்பு, பலகை கொண்டு தடுப்பு அமைத்தனர். மேலும், 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. வீடுகளை இழந்தவர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
சில ஆண்டுகளாக, எதிர்பாராத நாட்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. வீடுகளை இழந்து, சாலையில் வசிக்கிறோம். அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. மீன்பிடி தொழில் இருப்பதால், இங்கு வசிக்கிறோம். நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.