/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பில் அனுமதியின்றி கட்டிய கடைக்கு 'சீல்' வைப்பு
/
குடியிருப்பில் அனுமதியின்றி கட்டிய கடைக்கு 'சீல்' வைப்பு
குடியிருப்பில் அனுமதியின்றி கட்டிய கடைக்கு 'சீல்' வைப்பு
குடியிருப்பில் அனுமதியின்றி கட்டிய கடைக்கு 'சீல்' வைப்பு
ADDED : பிப் 16, 2025 04:07 AM

மேற்கு மாம்பலம்:கோடம்பாக்கம் மண்டலம், 134வது வார்டு, மேற்கு மாம்பலம் தம்பையா சாலையில், மூன்று மாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஏழு வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பின் முன்பகுதியில், மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், விதிகளை மீறி கடை கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்குடியிருப்பில் வாடகைக்கு வசிப்போர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி சார்பில், விதிமீறல் கட்டட உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுபடி, உதவி செயற் பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி பொறியாளர் தனலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், அசோக் நகர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று, அக்கடைக்கு 'சீல்' வைத்தனர்.