ADDED : மே 25, 2026 08:17 AM
அ நிறம் | அளவு
அடையாறு: அடையாற்றில் குதித்தவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
அடையாறு, திரு.வி.க., பாலத்தில் இருந்து, நேற்று மதியம் 50 வயது மதிக்கத்த்தக்க அடையாளம் தெரியாத ஆண், ஆற்றில் குதித்தார். அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் படகில் சென்று ஆற்றில் தேடினர்.
மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. தேடும் பணி இன்று தொடர்ந்து நடக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
