/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.18 கோடி 'ஹவாலா' பணம் தங்க 'பிஸ்கட்' பறிமுதல்
/
ரூ.1.18 கோடி 'ஹவாலா' பணம் தங்க 'பிஸ்கட்' பறிமுதல்
ADDED : பிப் 13, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை, நொளம்பூர் அருகே, சந்தேகத்திற்கு இடமான வாலிபரை, அமைந்தகரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின், அவர் தங்கியிருந்த வீட்டை சோதித்த போது, அங்கு, 1.18 கோடி ரூபாய், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 705 கிராம் தங்க பிஸ்கட்கள் இருந்தன.
விசாரணையில் அவர், மலேஷியாவில் குடியுரிமை பெற்ற அப்துல் அமீது, 26, என்பதும் 'ஹவாலா' பணம் பரிமாற்றுவதற்காக நொளம்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.
அப்துல் அமீதை கைது செய்த போலீசார், நகை மற்றும் பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.