/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கை, திருவள்ளூர் சிறுவர் அணி மாநில கிரிக்கெட்டில் அபார வெற்றி
/
செங்கை, திருவள்ளூர் சிறுவர் அணி மாநில கிரிக்கெட்டில் அபார வெற்றி
செங்கை, திருவள்ளூர் சிறுவர் அணி மாநில கிரிக்கெட்டில் அபார வெற்றி
செங்கை, திருவள்ளூர் சிறுவர் அணி மாநில கிரிக்கெட்டில் அபார வெற்றி
ADDED : டிச 27, 2024 08:41 PM

சென்னை:திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், முதலாவது தாகூர் 'யூ - 12' எனும் 12 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில கிரிக்கெட் போட்டி, ஆவடி இந்து கல்லுாரி மற்றும் ஆவடி மத்திய அரசின் ஓ.சி.எப்., மைதானத்திலும் நடக்கின்றன.
போட்டியில், 'ஏ' பிரிவில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை அணிகளும், 'பி' பிரிவில், திருவள்ளூர் டி.சி.ஏ., - செங்கல்பட்டு, வேலுார் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேற்று, இந்து கல்லுாரியில் நடந்த 'பி' மண்டல பிரிவு போட்டியில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை அணிகள் மோதின. போட்டிகள் 30 ஓவர்கள் அடிப்படையில் நடக்கின்றன.
போட்டியில் 'டாஸ்' வென்ற திருவண்ணாமலை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த செங்கல்பட்டு அணி, 29.5 ஓவர்களில் 99 ரன்களில் ஆட்டமிழந்தது.
அடுத்து பேட் செய்த திருவண்ணாமலை அணி, 27 ஓவர்களில் அனைத்து விக்கெட்யும் இழந்து, 31 ரன்களுக்கு சுருண்டது. செங்கை வீரர் குமார் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
மற்றொரு போட்டியில், திருவள்ளூர் மற்றும் வேலுார் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி, 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை அடித்தது. அடுத்து பேட் செய்த வேலுார் அணி, 30 ஓவர்களில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 80 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.