/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்குன்றம் சிறுமியர் திருவள்ளூரில் மீட்பு
/
செங்குன்றம் சிறுமியர் திருவள்ளூரில் மீட்பு
ADDED : டிச 09, 2025 05:15 AM
சென்னை: பள்ளிக்கு சென்ற இரு சிறுமி யர் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்குன்றம், பவானி நகரைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வராஜ் என்பவரது 10 வயது மகளும், புழல், திருநீலகண்ட நகரைச் சேர்ந்த கிரி என்பவரது 10 வயது மகளும், சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமியர், மாலை வீடு திரும்பவில்லை. பதற்றமடைந்த சிறுமியரின் பெற்றோர், உறவினர்கள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இரவு 9:00 மணியளவில் சிறுமியர் இருவரும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருப்பதாக, போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுமியரை மீட்டனர். கடத்தப்பட்டனரா அல்லது வழிதவறி சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

