/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.13 லட்சம் சீட்டு மோசடி செங்குன்றம் பெண் கைது
/
ரூ.13 லட்சம் சீட்டு மோசடி செங்குன்றம் பெண் கைது
ADDED : நவ 01, 2025 01:53 AM

எம்.கே.பி.நகர்: தீபாவளி சீட்டு நடத்தி 13 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, 34. இவர், செங்குன்றத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி, 39, என்பவரிடம் தீபாவளி சீட்டு கட்டியுள்ளார். ஈஸ்வரி, தன் உறவினர்கள், நண்பர்கள் என, 97 பேரிடம் வசூல் செய்து, பரமேஸ்வரியிடம் மொத்தம் 15.12 லட்சம் ரூபாய் சீட்டு கட்டியுள்ளார்.
கடந்த மாதம் சீட்டு முதிர்வடைந்த நிலையில், பரமேஸ்வரியிடம் சீட்டு பணத்தை திரும்ப கேட்ட போது, 1.76 லட்சம் ரூபாய் மட்டுமே திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள, 13.36 லட்சம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவானார்.
ஈஸ்வரி உட்பட பாதிக்கப்பட்டோர், புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனரிடம் புகாரளித்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, செங்குன்றத்தைச் சேர்ந்த பரமேஸ்வரியை நேற்று கைது செய்தனர்.

