/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடர் திருட்டு: வாலிபர் சிக்கினார்
/
தொடர் திருட்டு: வாலிபர் சிக்கினார்
ADDED : மே 31, 2025 03:41 AM

எண்ணுார்:எண்ணுார், வள்ளுவர் நகரைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, 32; தனியார் நிறுவன ஊழியர். மார்ச் 21ம் தேதி, குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 7 சவரன் தங்க நகைகள் மற்றும் 15,000 ரூபாய் உள்ளிட்டவை திருடு போயின.
அதேபோல், எண்ணுார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிமொழி, 45, என்பவர், ஏப்., 20ம் தேதி வீட்டை பூட்டி, பக்கத்தில் உள்ள சர்ச்சிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைத்து, பீரோவில் இருந்த 25,000 ரூபாய் திருடு போயிருந்தன.
இவ்விரு சம்பவங்கள் குறித்து, எண்ணுார் போலீசார் விசாரித்தனர். இதில், இரண்டு திருட்டு சம்பவங்களிலும், ஒரே நபர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அதன்படி, திருட்டில் தொடர்புடைய, திருவேற்காடைச் சேர்ந்த நரேந்திரன், 34, என்பவரை, எண்ணுார் போலீசார் நேற்று, கைது செய்தனர். அவரிடமிருந்து, 5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.