/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருப்பதி செல்லும் 4 ரயில்களின் சேவை மாற்றம்
/
திருப்பதி செல்லும் 4 ரயில்களின் சேவை மாற்றம்
ADDED : நவ 07, 2025 02:02 AM
சென்னை: ஆந்திர மாநிலம், திருப்பதி செல்ல வேண்டிய நான்கு முன்பதிவு இல்லாத ரயில்கள், திருச்சானுார் வரை மட்டுமே இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதனால், திருப்பதி செல்ல வேண்டிய முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்களின் சேவையில், வரும் பிப்., 5 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
l அரக்கோணம் - திருப்பதி காலை 9:15 மணி ரயில், திருச்சானுார் வரை மட்டுமே செல்லும்; அதேபோல் திருப்பதி - அரக்கோணம் மாலை 3:40 மணி ரயில், திருச்சானுாரில் இருந்து இயக்கப்படும்
l சென்ட்ரல் - திருப்பதி காலை 9:50 மணி ரயில், திருச்சானுார் வரை மட்டுமே இயக்கப்படும்; திருப்பதி - சென்ட்ரல் மதியம் 1:25 மணி ரயில், திருச்சானுாரில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

