/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிறந்த நாள் பார்ட்டியில் மோதல் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கைது
/
பிறந்த நாள் பார்ட்டியில் மோதல் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கைது
பிறந்த நாள் பார்ட்டியில் மோதல் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கைது
பிறந்த நாள் பார்ட்டியில் மோதல் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கைது
ADDED : அக் 06, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர்: வியாசர்பாடியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட ஆறு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, முல்லை காம்ப்ளக்ஸ் அருகில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, கத்தியுடன் இருதரப்பினர் மோதி கொள்வதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த கரண், 19, மற்றும் ஆறு சிறுவர்கள் உட்பட, ஏழு பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் முன்விரோதம் காரணமாக, சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.