/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்நிலை கலங்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு தனியார் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீர்
/
நீர்நிலை கலங்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு தனியார் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீர்
நீர்நிலை கலங்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு தனியார் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீர்
நீர்நிலை கலங்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு தனியார் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீர்
ADDED : ஏப் 23, 2025 12:13 AM
ஜல்லடியன்பேட்டை, பெருங்குடி மண்டலம், வார்டு -191க்கு உட்பட்ட ஜல்லடியன் பேட்டை, சாய்கணேஷ் நகரில், 1,500 வீடுகள் அமைந்துள்ளன.
இங்கு, வண்ணார்குட்டை எனும் நீர்த்தேக்கம் உள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், தனியார் நிலத்தில் தேங்குவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வண்ணார்குட்டையில் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் இணைப்புகள் கலக்கின்றன. ஆனால், நீர்த்தேக்கத்தின் கலங்கலில் இருந்து நீர் வெளியேறும் புறம்போக்கு நிலம் முழுதும் ஆக்கிரமித்து, வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. தவிர, மதகும் இயங்குவதில்லை.
இந்நிலையில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்ற உடைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தின் கரை, இன்னும் அடைக்கப்படாமல் உள்ளது.
இந்நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீர், சுற்றியுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, ஆண்டு முழுதும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பலவித நோய்த்தொற்றுக்கும் அப்பகுதிவாசிகள் ஆளாகின்றனர்.
தனியார் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற, மாநகராட்சி, முதல்வர் தனிப்பிரிவு என, தொடர்ந்து புகார் தெரிவித்தும், அதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், சாய்கணேஷ் நகர், 25வது தெருவில் முறையான வடிகால்வாய் அமைத்து, கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.