குடிநீரில் கழிவுநீர் கலப்பு வி.சி.க., ஆர்ப்பாட்டம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு வி.சி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
செம்மஞ்சேரி: குடிநீரில் கழிவுநீர் கலப்பை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, சுனாமி நகரில் நேற்று, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பு, சேதமடைந்த மின் கேபிள்களால் விபத்து அபாயம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், சாலை பழுது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
