/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால்வாயில் இருந்து சாலையில் பொங்கி வழியும் கழிவுநீர்
/
மழைநீர் வடிகால்வாயில் இருந்து சாலையில் பொங்கி வழியும் கழிவுநீர்
மழைநீர் வடிகால்வாயில் இருந்து சாலையில் பொங்கி வழியும் கழிவுநீர்
மழைநீர் வடிகால்வாயில் இருந்து சாலையில் பொங்கி வழியும் கழிவுநீர்
ADDED : அக் 30, 2025 03:55 AM

தி.நகர்: தி.நகர், பர்கிட் சாலையில் மழைநீர் வடிகாலில் இருந்து பொங்கி வழியும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலம், 141வது வார்டு தி.நகரில் பர்கிட் சாலை அமைந்துள்ளது. இது, தி.நகர் மேட்லி சாலை மற்றும் வெங்கட்நாராயண சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது.
இச்சாலையில், இரு தனியார் பள்ளிகள், தியேட்டர் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த சாலை சந்திப்பில், மழைநீர் வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது.
இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. ஒவ்வொரு மழைக்காலத்தில் இப்பிரச்னை தொடர்வதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''பர்கிட் சாலையின் இடது புறம் உள்ள மழைநீர் வடிகாலில் இருந்து வலது புறம் உள்ள மழைநீர் வடிகாலுக்கு, சாலையின் குறுக்கே குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அது சேதமடைந்துள்ளதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி வருகிறது. விரைவில் அந்த குழாய் சீரமைக்கப்படும்,'' என்றனர்.