/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 ஆண்டாக கழிவுநீர் பிரச்னை; அய்யப்பன்தாங்கலில் சீர்கேடு
/
2 ஆண்டாக கழிவுநீர் பிரச்னை; அய்யப்பன்தாங்கலில் சீர்கேடு
2 ஆண்டாக கழிவுநீர் பிரச்னை; அய்யப்பன்தாங்கலில் சீர்கேடு
2 ஆண்டாக கழிவுநீர் பிரச்னை; அய்யப்பன்தாங்கலில் சீர்கேடு
ADDED : செப் 23, 2024 06:25 AM

அய்யப்பன்தாங்கல்: சென்னை, போரூர் அருகே அய்யப்பன்தாங்கல் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள எஸ்.ஆர்.எம்.சி., காவல் நிலையம் அருகே, ஜெ.ஜெ., தெரு அமைந்துள்ளது.
இங்கு, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து பாத்திரம் துலக்கும் தண்ணீர் மற்றும் குளியல் அறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை, ஜெ.ஜெ., தெருவிலுள்ள சிமென்ட் சாலையோரம் உள்ள பக்கவாட்டு கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சிறிய கால்வாய் நிரம்பி வழிந்து, சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. மேலும், தெரு முழுதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிவாசிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.