/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை
/
முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை
முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை
முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை
ADDED : பிப் 09, 2024 12:24 AM
சிந்தாதிரிப்பேட்டை, ராயபுரம் மண்டலம், 62வது வார்டில் அருணாசலம் சாலை உள்ளது. இச்சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் இருந்து சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள், அருகே உள்ள மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை துண்டிக்க வேண்டிய சுகாதார துறையினர் கண்டுகொள்வதில்லை. எப்போது எல்லாம் வடிகாலிலிருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறதோ, அப்போது மட்டும் 'சூப்பர் சக்கர்' இயந்திரத்தை பயன்படுத்தி, கழிவுநீரை உறிஞ்சி அகற்றுகின்றனர்.
இப்படி, வாரத்திற்கு இரு முறை கழிவுநீரை அகற்றி வருகின்றனர். அதற்கு பதிலாக, சட்ட விரோத கழிவுநீர் இணைப்பை துண்டித்தால், மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.
மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

