/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் உந்து நிலையம் 30 மணி நேரம் நிறுத்தம்
/
கழிவுநீர் உந்து நிலையம் 30 மணி நேரம் நிறுத்தம்
ADDED : அக் 13, 2025 05:03 AM
சென்னை: புரசைவாக்கம் கழிவுநீர் உந்து நிலையம், 30 மணி நேரம் நிறுத்தப்படுவதால், கழிவுநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கபாதை மேம்பால கட்டுமான பணிக்காக, 1,050 மி.மீ., விட்டம் கொண்ட கழிவுநீர் உந்து குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இதனால், நாளை மதியம் முதல், நாளை மறுநாள் இரவு வரை, 30 மணி நேரம், திரு.வி.க., நகர் மண்டலம், புரசைவாக்கம் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது.
இதன் காரணமாக, நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட லாங்ஸ் கார்டன், நேப்பியர் பூங்கா, வால்டாக்ஸ் சாலை, அயனாவரம், ஏகாங்கிபுரம், பெரம்பூர், செம்பியம், சேத்துப்பட்டு, சாஸ்திரி நகர், கீழ்ப்பாக்கம், சுந்தரம் தெரு, ஷெனாய் நகர், ஓசான் குளம், கிரீம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.
அதுபோல் ஏற்பட்டால், லாரி கொண்டு உறிஞ்சி கழிவுநீர் வெளியேற்றப்படும். இதற்கு, ராயபுரம் - 81449 30905, திரு.வி.க., நகர் - 81449 30906, அண்ணா நகர் - 81449 30908, தேனாம்பேட்டை - 81449 30909 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.