ADDED : ஜன 17, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டையில் ஸ்மித் சாலை உள்ளது. எழும்பூரிலிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மட்டுமின்றி மயிலாப்பூர், மந்தைவெளி செல்லும் அனைத்து வாகனங்களும் இச்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றன.
இச்சாலையில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மூன்று நாட்களாக சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. புகார் அளித்தும் தொடர் விடுமுறை காரணமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.