/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் கழிவுநீர் தேக்கம் கரையான்சாவடியில் சீர்கேடு
/
சாலையில் கழிவுநீர் தேக்கம் கரையான்சாவடியில் சீர்கேடு
சாலையில் கழிவுநீர் தேக்கம் கரையான்சாவடியில் சீர்கேடு
சாலையில் கழிவுநீர் தேக்கம் கரையான்சாவடியில் சீர்கேடு
ADDED : அக் 25, 2024 12:37 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில், கரையான்சாவடி உள்ளது. கரையான்சாவடி- - ஆவடி செல்லும் நெடுஞ்சாலையில், கரையான்சாவடியில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலந்து நிரம்பி வழிவதால், சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதனால், அந்த வழியே செல்பவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால், பல இடங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. கரையான்சாவடியில் சில இடங்களில், சாலையோரம் வடிகால்வாய்கள் அமைக்கவில்லை.
இதனால், வடிகால்வாயில் ஒருபுறத்தில் இருந்து, மறுபுறத்திற்கு தண்ணீர் செல்ல வழி இல்லை. மழைநீருடன் கழிவுநீர் நிரம்பி வழிந்து சாலையில் தேங்கி நிற்பதால் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.