/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுடுகாடு அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி பாதிப்பு
/
சுடுகாடு அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி பாதிப்பு
ADDED : ஜன 21, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம் மண்டலம் 155வது வார்டு ராமாபுரத்தில், வள்ளுவர் சாலை உள்ளது. இச்சாலை, வளசரவாக்கம், ராமாபுரம் மற்றும் பரங்கிமலை -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலை. இச்சாலையில், மாநகராட்சி சுடுகாடு உள்ளது.
இதன் அருகே, பாதாள சாக்கடையில் ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டு, இயந்திர நுழைவு மூடி வாயிலாக கழிவுநீர் கசிந்து, சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அடைப்பை சரிசெய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரஞ்சித், வளசரவாக்கம்