தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவுநீர் குழாய் பதிப்பு அரைகுறை 100 மீ., பணிக்கு 3 மாதம் காத்திருப்பு

கழிவுநீர் குழாய் பதிப்பு அரைகுறை 100 மீ., பணிக்கு 3 மாதம் காத்திருப்பு

கழிவுநீர் குழாய் பதிப்பு அரைகுறை 100 மீ., பணிக்கு 3 மாதம் காத்திருப்பு


ADDED : செப் 22, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புழல்: குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் குழாய் பதித்த பகுதி சகதியாக மாறியுள்ளதால், அப்பகுதி மக்கள் நடக்கவே முடியாத அவலநிலை தொடர்கிறது.

புழல், கதிர்வேடு அருகே உள்ள பிரிட்டானியா நகரில், கழிவுநீர் குழாய் பதிப்பு பணி, கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. 98 சதவீத பணிகள் முடிந்த நிலையில், பம்பிங் ஸ்டேஷன் அருகே 100 மீட்டர் துாரத்திற்கு மட்டுமே குழாய் பதிக்க வேண்டியுள்ளது. ஆனால், மூன்று மாதங்களாக இப்பணியை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குடியிருப்போர் நலச்சங்கத்தினர், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முடிந்து விடும்’ என, மூன்று மாதங்களாக கூறி வருகின்றனர். மேலும், பணிகள் முடிந்த பகுதியை முறையாக சீரமைக்காததால், பிரிட்டானியா நகர் முதல் மற்றும் 3வது தெருக்கள் சகதியாக மாறியுள்ளன.

கனரக வாகனங்கள் வந்து செல்லும் போது, கழிவுநீர் மூடிகளும் சேதமாகி வருகின்றன. இப்பகுதிக்கு மட்டும், 80 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து, கழிவுநீர் குழாய் இணைப்பு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் கட்டப்பட்டுள்ளது. இவை, பயன்பாட்டிற்கு வரும் முன்பே பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us