ADDED : செப் 01, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சாலையில் உள்வாங்கியதால்
தேனாம்பேட்டை மண்டலம், ஆயிரம்விளக்கு பகுதியில், ஷபி முகமது சாலை உள்ளது. இச்சாலையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அருகே, நேற்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த குடிநீர் வாரியத்தினர் ஆய்வில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், விபத்து ஏற்படாமல் இருக்க, அப்பள்ளத்தைச் சுற்றி இரும்பு மற்றும் பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்தனர். வாரியத்தினர், குழாய் விரிசலை சீரமைத்து வருகின்றனர்.
