ADDED : நவ 13, 2024 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கீழ்ப்பாக்கம், உமையாள் தெருவிலுள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று, போலீசார் ஆய்வு செய்த போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்,22, விக்னேஷ், 24, ஆகிய இருவரும், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் சிக்கிய பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.