/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.4,848 கோடி
/
எஸ்.ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.4,848 கோடி
ADDED : மே 22, 2025 12:51 AM
சென்னை:தமிழக அரசின் வணிக வரித் துறைக்கு, எஸ்.ஜி.எஸ்.டி., எனப்படும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு; பெட்ரோல், டீசல், மதுபானங்கள் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக, வரி வருவாய் கிடைக்கிறது.
நடப்பு நிதியாண்டு துவங்கிய கடந்த ஏப்ரலில், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 4,848 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 4,067 கோடி ரூபாயாக இருந்தது.
இதையடுத்து, கடந்த மாதத்தில், 781 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இதே காலத்தில், மதிப்பு கூட்டு வரி வாயிலாக கிடைத்த வருவாய், 4,047 கோடி ரூபாயில் இருந்து, 4,055 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இந்த இரண்டு பிரிவிலும் கடந்த ஏப்ரலில், 8,903 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. இது, 2024 ஏப்ரலில், 8,114 கோடி ரூபாயாக இருந்தது.