/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா சர்வீஸ் சாலையில் ரூ.6 லட்சத்தில் நிழற்குடைகள்
/
மெரினா சர்வீஸ் சாலையில் ரூ.6 லட்சத்தில் நிழற்குடைகள்
மெரினா சர்வீஸ் சாலையில் ரூ.6 லட்சத்தில் நிழற்குடைகள்
மெரினா சர்வீஸ் சாலையில் ரூ.6 லட்சத்தில் நிழற்குடைகள்
ADDED : ஏப் 10, 2025 12:34 AM

சென்னை, சுற்றுலா தலமான சென்னை மெரினாவிற்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் சர்வீஸ் சாலையை ஒட்டி அமருவதற்காக இரும்பாலான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. உரிய பராமரிப்பு இல்லாததால் நிழற்குடைகள் சிதிலமடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு மாறியது.
இதையடுத்து தற்போது பயணியரை கவரும் வகையில் மூன்று இடங்களில் பழ வடிவிலான இருக்கைகளுடன் கூடிய நிழற்குடையை மாநகராட்சியினர் அமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மெரினா சர்வீஸ் சாலையில் தற்போது 'ஸ்டாபரி' பழ வடிவிலான நிழற்குடை அமைத்து வருகிறோம். முதற்கட்டமாக மூன்று இடங்களில் தலா, 2 லட்சம் செலவில் அமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.