UPDATED : அக் 06, 2026 12:28 AM
ADDED : அக் 06, 2026 12:26 AM
அ நிறம் | அளவு
கு ன்றத்துார் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, கிருத்திகை தினம் மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அவர்க ளின் வசதிக்காக, குன்றத்துார் முருகன் கோவில் மலையடிவாரம் வரை தினமும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால், குன்றத்துார் மலையடிவாரத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், வெயில், மழையில் கால் கடுக்க நின்று பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இருக்கை வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– சந்திரசேகரன்
குன்றத்துார்.
