/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உதவி செயற் பொறியாளரிடம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தகராறு
/
உதவி செயற் பொறியாளரிடம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தகராறு
உதவி செயற் பொறியாளரிடம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தகராறு
உதவி செயற் பொறியாளரிடம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தகராறு
ADDED : டிச 25, 2025 05:30 AM

கே.கே.: கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு அண்ணா பிரதான சாலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இச்சாலையோரம் அம்மா உணவகம், மாநகராட்சி குப்பை அகற்றும் பேட்டரி வாகனங்களுக்கான மையம் அமைந்துள்ளன.
இதன் அருகே, சிலர் சாலையை ஆக்கிரமித்து, ஷேர் ஆட்டோ நிலையமாகவும், ஆட்டோவை பழுதுபார்க்கவும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியில் தான், துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோடம்பாக்கம் மண்டலம் உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன், அப்பகுதியை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், உதவி செயற்பொறியாளர் பைக் மீது மோதி தகராறு செய்தனர்.