/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடு முட்டி ஊழியர் காயம் தொடரும் அதிர்ச்சி
/
மாடு முட்டி ஊழியர் காயம் தொடரும் அதிர்ச்சி
ADDED : ஜூலை 25, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் மாடு முட்டி ஊழியர் காய மடைந்தார். ஐஸ்ஹவுஸ், அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 47.
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு அருகே நடந்து சென்றார். அப்போது பசுமாடு, அவரை முட்டி துாக்கி வீசியது. இதில் காயமடைந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று வீடு திரும்பினார். ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
சுகாதார துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'இரவு சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை நிற பசுமாடு இருந்தது. காலையில் சிறைபிடிக்க சென்றபோது அங்கு இல்லை' என்றார்.

