sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 குடிநீர் வினியோகத்தில் தொடரும் குளறுபடி சோழிங்கநல்லுார் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

/

 குடிநீர் வினியோகத்தில் தொடரும் குளறுபடி சோழிங்கநல்லுார் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

 குடிநீர் வினியோகத்தில் தொடரும் குளறுபடி சோழிங்கநல்லுார் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

 குடிநீர் வினியோகத்தில் தொடரும் குளறுபடி சோழிங்கநல்லுார் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு


ADDED : நவ 18, 2025 04:38 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் மண்டலம் முழுதும், குடிநீர் வினியோகத்தில் குளறுபடி உள்ளதாகவும், அது குறித்து புகார் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும், சோழிங்கநல்லுார் மண்டல குழு கூட்டத்தில், அனைத்து கட்சி கவுன்சிலர்களும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

சோழிங்கநல்லுார் மண்டல குழு கூட்டம், மண்டல அதிகாரி தணிகைவேல் முன்னிலையில், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில் நேற்று நடந்தது.

அதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:

கோவிந்தசாமி, அ.தி.மு.க., 193வது வார்டு: கவுன்சிலர் நிதி ஒதுக்கியும், பேருந்து நிழற்குடை, பெயர் பலகை அமைக்கவில்லை.

விமலா, தி.மு.க., 194வது வார்டு: மூன்று குளங்களை துார்வாராததால் மழைநீரை சேமிக்க முடியவில்லை.

ஏகாம்பரம், தி.மு.க., 195வது வார்டு: வார்டு முழுதும் சேதமடைந்த புதிய குழாய்களை சீரமைக்காததால், ஆறு மாதங்களாக மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

குடியிருப்பு பகுதியில் மரக்கிளைகளை அகற்றாததால், அவை வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, வெள்ள பாதிப்புக்கு காரணமாகின்றன. ஏரியா சபை கூட்டங்களில், குடிநீர், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பதில்லை.

மேனகா, அ.தி.மு.க., 197வது வார்டு: பயன்பாடு இல்லாத சுனாமி மையத்தை, வேறு வகையில் பயன்படுத்தாததால், கஞ்சா, மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறிவிட்டது.

குடிநீர் வினியோகத்தில் உள்ள குளறுபடியை நீக்க வேண்டும். தனிப்பட்ட பிரச்னையில் சாலை போட விடாமல் தடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர், தி.மு.க., 199வது வார்டு: வார்டில் முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை. பிரதான குழாய்களில் வீணாகும் குடிநீரையும் தடுப்பதில்லை.

முருகேசன், தி.மு.க., 200வது வார்டு: இரண்டு பூங்காவில் பராமரிப்பு ஊழியர்கள் நியமிக்காததா ல், மிகவும் மோசமாக உள்ளன.

செம்மஞ் சேரியில் மெட்ரோ ரயில் பணிக்கு தெரு விளக்குகளை அகற்றியதால், இரவில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. குடிநீர் வினியோகிப்பதில்லை என புகார் அளித்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் லை.

இதற்கு, அந்தந்த துறை அதிகாரி கள் பதில் கூறினர். குடிநீர் வினியோகம் தொடர்பான கேள்விகளுக்கு கூறிய பதில் திருப் தி இல்லாததால், கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர் .

இதற்கு, மண்டல குழு தலைவர் மதியழகன் கூறுகையில், “அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக அதே வார்டு அ லுவலகம் தாழ்வாக தான் இருந்தது. அப்போது, புதிய வார்டு அலுவலகம் கட்டவில்லை. தி.மு.க., ஆட்சியில் கட்டியுள்ளோம். விரைவில் அலுவலகம் திறக்கப்படும்,” என்றார்.

தொடர்ந்து, சாலை, வடிகால்வாய் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக, 61 தீர்மானங்கள் நிறை வேற்றப்ப ட்டன.

அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு

அ.தி.மு.க., கவுன்சிலர் லியோசுந்தரம் கூறியதாவது: இன்று வரை, 39 கூட்டங்களில் பேசியும், தெரு பலகைகள் அமைக்கவில்லை. ஏழை, நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு குடிநீர் முறையாக வினியோகிப்பதில்லை. வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதியில், தினமும் குடிநீர் வினியோகித்து, பாரபட்சமாக செயல்படுவது எந்த விதத்தில் நியாயம். தாழ்வாக உள்ள வார்டு அலுவலகத்தில் வெள்ளம் புகுந்து ஆவணங்கள் நாசமடைவது தெரிந்தும், கட்டி முடித்து பல மாதங்களாகியும் புதிய வார்டு அலுவலகத்தை திறக்கவில்லை. என் வார்டு மக்களுக்கு தேவையான அவசிய பணிகளைக்கூட அதிகாரிகள் செய்து தருவதில்லை. மக்களை புறக்கணிக்கின்றனர். இதனால் இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன். இவ்வாறு கூறி, கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.








      Dinamalar
      Follow us