ADDED : மார் 06, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
சோழிங்கநல்லுார்: புதிய கட்டடம் கட்டப்படுவதால், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகம், ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கட்டடத்தை இடித்து, 10 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
அதனால், இந்த அலுவலகம், அருகில் உள்ள சமுதாய நல கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைகளுக்கு, இந்த சமுதாய நலக்கூடத்திற்கு வர வேண்டும் என, மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
