தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துப்பாக்கிச் சுடுதலில் அசத்திய எஸ்.ஆர்.எம்., வீரர் – வீராங்கனை

துப்பாக்கிச் சுடுதலில் அசத்திய எஸ்.ஆர்.எம்., வீரர் – வீராங்கனை

துப்பாக்கிச் சுடுதலில் அசத்திய எஸ்.ஆர்.எம்., வீரர் – வீராங்கனை


ADDED : செப் 03, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, செப்.4–

தென் மண்டல துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., வீரர் – வீராங்கனை மூன்று தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

புதுக்கோட்டையில், ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், இருபாலருக்குமான 27-வது தென் மண்டல துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த ஆக., 31ம் தேதி தொடங்கியது. வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஷாட்கன் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் வீரர் – வீராங்கனை சிறப்பாக விளையாடி மூன்று தங்கம், ஒரு வெள்ளி என, மொத்தம் நான்கு பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

மகளிர் பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஐஷ்மிகா தின்கர் குமார், 19, டபுள் டிராப் ஜூனியர் மற்றும் டபுள் டிராப் ஓபன் பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஆடவர் பிரிவில் ராமாபுரம் வளாகத்தில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வரும் ஹிருத்திகேஷ், 17, டபுள் டிராப் ஜூனியர் ஆடவர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், டபுள் டிராப் யூத் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us