தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடைகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு எம்.எம்.டி.ஏ., காலனியில் அவலம்

கடைகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு எம்.எம்.டி.ஏ., காலனியில் அவலம்

கடைகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு எம்.எம்.டி.ஏ., காலனியில் அவலம்


ADDED : டிச 16, 2024 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 03:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரும்பாக்கம்,:அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது. எம்.எம்.டி.ஏ., காலனி - 100 அடி சாலையை இணைக்கும் இந்த பிரதான சாலையில், இருபுறங்களிலும் நடைபாதையில் மெக்கானிக் கடைகள், உணவகம், டீ கடைகள் என, பலவிதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், வாட்டர் டேங்க் - எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலையில், சந்தை என்ற பெயரில் நடைபாதை முழுதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது.

குறிப்பாக, இந்த சாலை முழுவதும், 10 மீ., இடைவெளியில் 20 இடங்களில், 'நடைபாதை நடப்பதற்கே' என இருபுறங்களும் வரிசையாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை வெறும் கண் துடைப்புக்கு தான்.

இதுகுறித்து அப்பகுதிகளில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :

எம்.எம்.டி.ஏ., காலனியில் பல ஆண்டுகளாக நடைபாதை ஆக்கிரமிப்பு உள்ளது. மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூாபாய் செலவில் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டும் பயனில்லை.

தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us