/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்
ADDED : மார் 16, 2024 12:14 AM

பிராட்வே, சென்னை, பிராட்வே, என்.எஸ்.சி.போஸ் சாலையில், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையில் தடுப்புகளை அமைத்தனர். இந்நிலையில், மீண்டும் நடைபாதையில் 100க்கும் மேற்பட்ட பழக்கடைகள், காய்கறிக் கடைகள் முளைத்தன.
இந்த நிலையில், ராயபுரம் செயற்பொறியாளர் சொக்கலிங்கம், ராயபுரம் மண்டல 59வது வார்டு உதவி பொறியாளர் கார்த்திக் மேற்பார்வையில், 15க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், பிராட்வே, கோவிந்தப்ப நாயக்கன் தெரு துவங்கி பிராட்வே ஜங்ஷன் வரையிலும்; என்.எஸ்.சி.போஸ் ரோடு, பிராட்வே பேருந்து நிலையம் உள்ளிட்ட, சாலையோரம் இருந்த 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூக்கடை போலீசார் 40க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

