ADDED : அக் 19, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, உணவு வழங்கல் துறை சார்பில், சென்னையில், 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில், ரேஷன் குறைதீர் கூட்டம், இன்று நடக்கிறது.
காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் தொடர்பான சேவைகள் செய்து தரப்படுகின்றன.
முகாமில், பொது மக்கள் பங்கேற்று, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரம் அல்லது சேவைகள் தொடர்பாக புகார் அளிக்கலாம்.