/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ., மனைவியிடம் பர்ஸ்சை திருடி ஏ.டி.எம்.,யில் ரூ 20,000 'ஆட்டை'
/
எஸ்.ஐ., மனைவியிடம் பர்ஸ்சை திருடி ஏ.டி.எம்.,யில் ரூ 20,000 'ஆட்டை'
எஸ்.ஐ., மனைவியிடம் பர்ஸ்சை திருடி ஏ.டி.எம்.,யில் ரூ 20,000 'ஆட்டை'
எஸ்.ஐ., மனைவியிடம் பர்ஸ்சை திருடி ஏ.டி.எம்.,யில் ரூ 20,000 'ஆட்டை'
ADDED : மார் 19, 2025 12:25 AM
திருமங்கலம்,பஸ்சில் சென்ற எஸ்.ஐ., மனைவியிடம் பர்ஸ்சை திருடி, ஏ.டி.எம்.,யில், 20,300 ரூபாய் 'ஆட்டை'யை போட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை நொளம்பூர், டி.வி.எஸ்., காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 50. இவர், எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் செக்யூரிட்டி குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.
இவரது மனைவி பச்சையாம்மாள், 44 என்பவர், நேற்று முன்தினம், நொளம்பூரில் இருந்து, 'தடம் எண் 147' பேருந்தில், தி.நகருக்கு சென்றார்.
பேருந்தில் ஏறியவுடன், கூட்டமாக இருந்ததால், தன் கையில் இருந்த, கட்டப்பையை இருக்கையில் அமர்ந்திருந்த நபரிடம் கொடுத்துள்ளார். அமைந்தகரை ஸ்கை வாக் நிறுத்தில், பச்சையம்மாள் இறங்கியுள்ளார்.
பையில் உள்ள பர்ஸ்சை தேடிய போது, திருடுபோனது தெரிந்தது. அதில், கடவுச்சொல் எண் எழுதப்பட்ட ஏ.டி.எம்., அட்டை உள்ளிட்டவை இருந்துள்ளது.
சிறிது நேரத்தில், அவரது மொபைல் எண்ணிற்கு அடுத்தடுத்து குறுந்தகவல் வந்தது. அதில், திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில், இரு முறை, தலா 10,000 ரூபாயும், ஒரு முறை, 300 ரூபாயும் எடுத்தது போல் பதிவாகியிருந்தது.
அதிர்ச்சியடைந்த பச்சையம்மாள் திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
***