தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சைகை மொழி விழிப்புணர்வு

சைகை மொழி விழிப்புணர்வு

சைகை மொழி விழிப்புணர்வு


ADDED : செப் 24, 2024 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயபுரம், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் சைகை மொழியை பயன்படுத்துவது குறித்த பயிலரங்கம், ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று நடந்தது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில், சர்வதேச சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் வாரம் அனுசரிக்கப்பட்டது. செவித்திறன் குறைபாடுள்ளோருடன் தொடர்பு கொள்வதற்கு சைகை மொழியின் முக்கியத்துவம், காது கேளாமை தடுப்பு மற்றும் சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒலியியல் வல்லுனர் முத்துசெல்வி சைகை மொழி முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பேசினார். காது பாதுகாப்பு சாதனங்களின் பயன்பாடு குறித்த செயல்விளக்கம் மற்றும் கருவிகளின் கண்காட்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us