/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிக்னல் கோளாறு: ரயில் சேவை பாதிப்பு
/
சிக்னல் கோளாறு: ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஜன 28, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், தினசரி மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மதியம் 2:45 மணிக்கு, இரு வழித்தடங்களிலும், சிக்னல் கிடைக்காமல் மின்சார ரயில்கள் நின்றன.
பின் வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 40 நிமிடங்கள் தாமதத்திற்கு பின், மீண்டும் சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து, மின்சார ரயில் சேவை துவங்கியது.
எண்ணுார் ரயில் நிலைய மேலாளர் அறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சிக்னல் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.