/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேன் மோதி சாலையில் சரிந்த சிக்னல் கம்பம்
/
வேன் மோதி சாலையில் சரிந்த சிக்னல் கம்பம்
ADDED : மார் 30, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் கூட்டு சாலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழியே, நேற்று வேகமாக சென்ற வேன், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சிக்னல் கம்பம் மீது மோதியது.
இதில், சிக்னல் கம்பம் சாலையில் விழுந்ததால், அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், சிக்னல் கம்பத்தை அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.