/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணை நடிகை வீட்டில் வெள்ளி, பணம் திருட்டு
/
துணை நடிகை வீட்டில் வெள்ளி, பணம் திருட்டு
ADDED : நவ 10, 2024 08:54 PM
அரும்பாக்கம்:துணை நடிகை வீட்டின் பூட்டை உடைத்து, பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அரும்பாக்கம், ரசாக் கார்டனைச் சேர்ந்தவர் தீபா பாஸ்கர்; துணை நடிகை. நேற்று முன்தினம் இவரது பிறந்தநாள் என்பதால், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார்.
பின், இரவு திரும்பிய போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் வைத்திருந்த சில வெள்ளி பொருட்கள் மற்றும் 20,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், திருட்டு குறித்து விசாரித்தனர். இதில், சேமித்து வைத்த பணத்தை பீரோவில் வைக்காமல், வேறு இடத்தில் வைத்திருந்ததால் பணம் தப்பியது.
அதேபோல், பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் வைத்திருந்த நகைகளை அணிந்து சென்றதால், நகையும் தப்பியது. போலீசார் விசாரிக்கின்றனர்.