/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மறுமணம் நிச்சயித்து 50 சவரன் ஏமாற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை
/
மறுமணம் நிச்சயித்து 50 சவரன் ஏமாற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை
மறுமணம் நிச்சயித்து 50 சவரன் ஏமாற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை
மறுமணம் நிச்சயித்து 50 சவரன் ஏமாற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை
ADDED : நவ 26, 2024 12:35 AM
வளசரவாக்கம்,:வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்த 36 வயது பெண், அப்பகுதியில் அழகு சாதன நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு, 2012ல் திருமணமாகி, 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2021ல் விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், மறுமணத்திற்காக மேட்ரிமோனி என்ற திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த இணையதளம் வாயிலாக, சிங்கப்பூரை சேர்ந்த துணேசன் கிருஷ்ணமூர்த்தி என்பவர், மொபைல் போன் வாயிலாக பெண்ணிடம் பேசி அறிமுகமானார்.
கடந்த ஆக., 26ல் இருவருக்கும், சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அப்பெண், ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.
வரதட்சணையாக, 250 சவரன் நகை கேட்ட துணேசன் கிருஷ்ணமூர்த்திக்கு, மாப்பிள்ளை சீராக 50 சவரன் நகை பெற்று, சிங்கப்பூர் சென்றார்.
அப்பெண்ணை திருமணம் செய்வதை துணேசன் கிருஷ்ணமூர்த்தி தவிர்த்து வந்தார். இதையடுத்து அப்பெண், தான் அளித்த 50 சவரன் நகையை திருப்பி கேட்டபோது, தர மறுத்துள்ளார்.
இதுகுறித்த, புகாரின்படி, வளசரவாக்கம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.