/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெட்ரோ' அட்டைக்கு 'குட்பை' ஆக., 1 முதல் சிங்கார சென்னைதான்
/
'மெட்ரோ' அட்டைக்கு 'குட்பை' ஆக., 1 முதல் சிங்கார சென்னைதான்
'மெட்ரோ' அட்டைக்கு 'குட்பை' ஆக., 1 முதல் சிங்கார சென்னைதான்
'மெட்ரோ' அட்டைக்கு 'குட்பை' ஆக., 1 முதல் சிங்கார சென்னைதான்
ADDED : ஜூலை 22, 2025 12:36 AM
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் பயணியர் அட்டை, வரும் 1ம் தேதி முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற்றப்பட உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. க்யூ.ஆர்., டிக்கெட் மற்றும் பிற டிக்கெட்டுகள் பெறும் முறைகள் வழக்கம் போல் தொடரும்.
பயணியர், தங்கள் பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை, மெட்ரோ ரயில்களில் பயணிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயண அட்டையின் இருப் புத் தொகை, 50 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்போது, சி.எம்.ஆர்.எல்., பயண அட்டையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் டிக்கெட் மையங்களில் ஒப்படைத்து விட்டு, இதற்குப் பதிலாக, சிங்கார சென்னை அட்டையை கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
பழைய பயண அட்டையின் வைப்புத் தொகை மற்றும் மீதமுள்ள தொகையை, புதிய சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றி.தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.