/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்காரவேலர் பிறந்த நாள் அரசு சார்பில் மரியாதை
/
சிங்காரவேலர் பிறந்த நாள் அரசு சார்பில் மரியாதை
ADDED : பிப் 19, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு, அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் ஆகியோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, சிங்காரவேலர் சிலைக்கு, அமைச்சர் அன்பரசன், மேயர் பிரியா, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பிலும், அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

