UPDATED : ஆக 24, 2026 07:04 PM
ADDED : ஆக 24, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில், சாமிநாயக்கன் தெருவில் சுனில், 45, என்பவர், கணினி உதிரி பாகங்கள் கிடங்கு வைத்துள்ளார்.
இவரது கிடங்கில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து, எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட நான்கு தீயணைப்பு நிலைய வாகனங்கள் சென்று, தீயை அணைத்தன.
மின்கசிவு காரணமாக, இந்த விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து மற்றும் தீப்பற்றி பொருட்கள் விபரம் குறித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
