UPDATED : ஜூன் 24, 2025 07:51 AM
ADDED : ஜூன் 24, 2025 12:15 AM
கொருக்குப்பேட்டைசென்னையில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் நடமாட்டத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி, வடக்கு மண்டல இணை கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, மெத் ஆம்பெட்டமைன் பயன்படுத்திய மயிலாப்பூர், பங்காரு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தனியார் கல்லுாரி பி.காம்., 2ம் ஆண்டு மாணவரான பிரவீன்குமார், 21, மயிலாப்பூர், வீர பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அஸ்வின் குமார், 21, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்; 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, மந்தைவெளி, வள்ளீஸ்வரன் கார்டனைச் சேர்ந்த ராகுல், 22, என்பவரை கைது செய்து, 7 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்தனர்.
இவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த, மெரினா கடற்கரையில் 'டாட்டூ' குத்தும் வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், 25, என்பவரை தேடி வருகின்றனர்.